அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.......




இதோ வந்து விட்டது பொங்கல்,

நாமும் தயாராகி விட்டோம்...

வீட்டை சுத்தம் செய்ய, வாசலில் அடுத்த வீட்டுக்கு போட்டியாக என்ன கலர் கோலம் போடலாம் என்று தேட...

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எஸ்.எம்.எஸ் அல்லது போன் மூலமா வாழ்த்து செய்தி அனுப்ப..

ஆனால், இந்த விழாவின் பின் உள்ள கதை தெரியுமா உங்களுக்கு??

உங்களுக்கு தெரியலை என்றால் இதோ, நானே இங்கு எனக்கு தெரிந்த வாரு சொல்கிறேன்...



ஒரு முறை, சிவன் தன் காளையான பாசாவாவை அழைத்து, பூமிக்கு சென்று மனிதர்களை தினமும் எண்ணை குளியல் எடுத்து, மாதத்துக்கு ஒரு முறை சாப்பிடும்படி கூறினாராம். ஆனால், பாசாவா தினமும் சாப்பிட்டு, மாதத்துக்கு ஒரு முறை எண்ணை குளியல் எடுக்கும்படியும் கூறிவிட்டார். சிவனுக்கு கோபம் வந்து அவரை பூமியிலேயே இருக்கும்படி சொல்லிவிட்டார். மேலும், தினமும் மனிதர்கள் சாப்பிடுவதற்க்காக நிலத்தை உழுது கொடுக்கும்படி ஆணையிட்டார். அன்றிலிருந்து, மாடுகள் மனிதர்களுக்கு உதவியாய் உழைக்க ஆரம்பித்தன.

அதற்க்கு
, நன்றியாய் தான் நாம் ஒவ்வொரு வருடமும் தை மாதம் 2ஆம் நாளை 'மாட்டு பொங்கல்'ஆகவும்,

சூரிய
பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக தை முதல் நாளை 'தை பொங்கல்'ஆகவும் கொண்டாடுகிறோம்..

ஆக, மறுபடியும் ஒரு தடவை உங்க எல்லாத்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்...

3 comments:

Saranya Venkateswaran said...

அட....
பொங்கல் கொண்டாட இந்தக் கதை தான் காரணமா?!!!
என் அறிவுக் கண்களை திறந்து விட்டாய் போ...

Saranya Venkateswaran said...

பி.கு: ஒரு வேளை இந்தக் கதையை படித்து விட்டு தான் ரஜினி தன் படத்துக்கு "பாஷா" னு பேர் வேசாரோ என்னவோ!!!

priya said...

அது பாஷா இல்ல.. 'பாசவா'...