நம்ம வீட்ல வளர்க்கிற நாயும் பூனையும் எப்பவும் சண்டையிடறத நாம பார்க்கிறோம். ஆனா இந்த சண்ட எப்ப இருந்து இருக்குதுனு உங்களுக்கு தெரியுமா?... எதோ எனக்கு தெரிஞ்சத சொல்றேன் கேட்டுக்கோங்க..
ரொம்ப காலத்துக்கு முன்னாடி, ஒரு நாய் பூனையை கல்யாணம் செய்துக்குச்சு. ரெண்டு பெரும் சந்தோசமா வாழ்ந்தாங்க. நாய் பகலில் வேலைக்குப் போய் விடும். பூனை வீட்டுலேயே இருக்கும்.



ஒவ்வொரு நாளும் நாய் வீட்டுக்கு வரும்போதும் அதுக்கு சாப்பட எதுவுமே இருக்காது. அதுக்கு பூனை எனக்கு உடம்பு சரியில்லனு சொல்லிட்டு தூங்கிடும்.



ஒரு
நாள், நாய் திட்டம் போட்டு வேலைக்கு போரேன்னு சொல்லிட்டு வீட்டு பின் புறம் ஒளிஞ்சுக்கிச்சு. பகல்ல பூனை வித விதமா சமைச்சு தானே சாப்பிட ஆரம்பித்தது. இத பார்த்த நாய், கோபத்தோடு சமையலறைக்குள்ள பாய உடனே பூனை ஒரு சிறிய ஆரஞ்சு பழத்த வாயில்ல ஒதுக்கிக்கிட்டு தனக்கு பல் வலின்னு நாடகமாடுச்சு. நாய் பூனையோட கன்னத்துல ஓங்கி ஒரு குத்து விட்டுச்சு, உடனே ஆரஞ்சுப்பழம் வெளியே வந்து விழுந்துச்சு. பயந்து போன பூனை, நாய்க்கிட்ட இருந்து தப்பி ஒடுச்சு. அதிலிருந்து தான் நாய்கள் பூனைகள பார்த்தா துரத்துதாம்..!!

dog nd cat

4 comments:

Saranya Venkateswaran said...

rஎனக்கு ஒரு சந்தேகம்.
வடிவேலுவும் கோவை சரளாவும் ஏன் சண்டை போடுறாங்க?

priya said...

அது தெரியல வேணும்னா பூனை ஏன் எலிய துரத்துதுனு அடுத்த பதிப்புல சொல்ரேன்!!! ;)

Saranya Venkateswaran said...

ஒ... உங்கள் அடுத்த பதிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கண்மணி/kanmani said...

அப்ப பூனை ஏன் எலியைத் துரத்துது
[சின்னவீடோ] ஹாஹாஹா